Unakku Thaan (From "Chithha")
Santhosh Narayanan
3:37தென் கிழக்கு தேன் சிட்டு செம்பருத்தி பூ மொட்டு செல்ல கொஞ்சுதே தாலாட்ட எத்தனையோ காலம் வராத வானவில் வந்தது போல் நீ பேச உச்சியிலே நீந்தும் ஆகாச மீனென துள்ளிடுதே உன் ஆச மழை அடிக்கும் உன் சிரிப்பில் செடி முளைக்கும் நான் பூவாக வெயில் அடிக்கும் நாள் வரைக்கும் கொட புடிப்பேன் உன் தாயாக நீ நீ சொல்லும் கதை நான் நான் கேக்கும் வரை நாம் ஆவோம் மாயப் பறவைகளே தென் கிழக்கு தேன் சிட்டு செம்பருத்தி பூ மொட்டு செல்ல கொஞ்சுதே தாலாட்ட ஒத்தையிலே போகும் வெட்டவெளி மேகம் மீட்டெடுத்து பாடாதோ றெக்கைவிரிச்சு சீட்டெறும்பு போடும் நதிச்சத்திர கோலம் சொல்லெடுத்து வீசாதோ உன்ன ரசிச்சு தெரிஞ்சே நீ செய்யும் சேட்டை தெளிவாக உன்ன காட்ட அதில் கோடி ராகம் நானும் மீட்ட தெருவெங்கும் தேற ஓட்ட மரமெல்லாம் ஊஞ்சல் ஆட்ட பெருகாதோ காலம் வேகம் கூட்ட பனங்கருக்கும் பால் சுரக்கும் அத நெனச்சே நீ கொண்டாடு பசி மறக்கும் நாள் பிறக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு பனங்கருக்கும் பால் சுரக்கும் அத நெனச்சே நீ கொண்டாடு பசி மறக்கும் நாள் பிறக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு பனங்கருக்கும் (நீ நீ சொல்லும் கதை) பால் சுரக்கும் (நான் நான் கேக்கும் வரை ) அத நெனச்சே நீ கொண்டாடு (நாம் ஆவோம் மாயப் பறவைகளே) பசி மறக்கும்(நீ நீ சொல்லும் கதை) நாள் பிறக்கும்(நான் நான் கேக்கும் வரை ) வலி மறந்தே நீ கூத்தாடு(நாம் ஆவோம் மாயப் பறவைகளே ) பனங்கருக்கும் பால் சுரக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு