Kadhal Kanave

Kadhal Kanave

Sean Roldan

Длительность: 4:09
Год: 2014
Скачать MP3

Текст песни

காதல் கனவே தள்ளி போகாதே-போகாதே
ஆச மறச்சு நீ ஒளியாதே, ஓடாதே

காதல் கனவே தள்ளி போகாதே-போகாதே
ஆச மறச்சு நீ ஒளியாதே, ஓடாதே

கனியே உன்ன காண காத்திருக்கேன்
அடியே வழி நானும் பாத்திருக்கேன்
தேனாழியில் நீராடுதே மனமே
ஓ பூவாளியில் நீ தூக்க வா தினமே

காதல் கனவே தள்ளி போகாதே-போகாதே

செதராம சிறுமொழி பேசி சிரிப்பாலே நறுக்குன்னு ஊசி
பதிச்சாளே பரவசமானேன் சொகமா
சிறுநூலா துணியில் இருந்து தனியாக வெலகிவிழுந்து
மனமிங்கே இளகி போச்சு மெதுவா

இறகால படகா நீந்தி காத்தில் நானும் மெதந்தேனே
கடிவாள குதிரையாக எனதான் நீயும் இழுத்தாயே
மாறாதே மனமே மானே
மடிமேலே விழுந்தேன் நானே

காதல் கனவே தள்ளி போகாதே-போகாதே
ஆச மறச்சு நீ ஒளியாதே, ஓடாதே

பருவத்தில் பதியம் செஞ்சேன் பதுங்காம மெதுவா மிஞ்சேன்
புதுவேகம் எடுத்தே நடந்தேன் தனியே
உருவத்த நெழலா புடிச்சேன் உறவாக கனவுல பரிச்சேன்
உனக்காக நெசமா துடிச்சேன் மயிலே

இரவோடு பகலா சேர மாலை தேடி இருந்தேனே
கண்ணாடிதொட்டி மீனா நாளும் உன்ன பாத்தேனே
மாறாதே மனமே மானே
மடிமேலே விழுந்தேன் நானே

காதல் கனவே
ஆச மறச்சு

காதல் கனவே தள்ளி போகாதே-போகாதே
ஆச மறச்சு நீ ஒளியாதே, ஓடாதே

கனியே உன்ன காண காத்திருக்கேன்
அடியே வழி நானும் பாத்திருக்கேன்
தேனாழியில் நீராடுதே மனமே
ஓ பூவாளியில் நீ தூக்க வா தினமே