Inayae

Inayae

Sid Sriram, Padmalatha

Альбом: Thadam
Длительность: 3:35
Год: 2019
Скачать MP3

Текст песни

இணையே என் உயிர் துணையே
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி
அழகே என் முழு உலகம் உன் விழிகளிலே
கண் உறங்குது பாரடி

அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

துணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா
யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா இணையே

மையல் காதலாய் மாறிய புள்ளி
என்றோ மனம் கேட்குதே

காதல் காமமாய் உருகொண்ட தருணம்
நினைக்கையில் உயிர் வேர்க்குதே

உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்

எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்

ஆஆ இணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி

ஆஆ யுகமாய் கை விரல் பிடித்து
நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடா

ஓ அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே ஏ
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

இணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி
யுகமாய் உன் விரல் பிடித்து நாம் நடப்பது போல்(யுகமாய்)
நான் உணர்வது ஏனடி

இணையே