Nee Illai

Nee Illai

Sirpy, Pazhani Bharathi, & Hariharan

Длительность: 4:15
Год: 1997
Скачать MP3

Текст песни

ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ

நீ இல்லை நிலவில்லை
நிழல் கூட துணையில்லை
நீ இல்லை நிலவில்லை
நிழல் கூட துணையில்லை

நீதானே எப்போதும்
எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது
நீ என் கண்ணீர் ஆகின்றாய்

நீ இல்லை நிலவில்லை
நிழல் கூட துணையில்லை
நீ இல்லை நிலவில்லை
நிழல் கூட துணையில்லை

உன் பேரை நான் எழுதி
என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனை தேடி
உன்னில்தான் சந்தித்தேன்

காதலே காதலே
ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும்
அலைந்திடதானா சொல்

நீ இல்லை நிலவில்லை
நிழல் கூட துணையில்லை
நீ இல்லை நிலவில்லை
நிழல் கூட துணையில்லை

ஆஆ ஆஆ ஆஆ

பகலின்றி வாழ்ந்திருந்தேன்
சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன்
வானவில்லை தந்தாயே

கூந்தலில் சூடினாய் (ஆஆ)
வாடும் முன் வீசினாய் (ஆஆ)
அடி காதலும்
பூவை போன்றதுதானா சொல்

நீ இல்லை நிலவில்லை
நிழல் கூட துணையில்லை
நீ இல்லை நிலவில்லை
நிழல் கூட துணையில்லை

நீதானே எப்போதும்
எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது
நீ என் கண்ணீர் ஆகின்றாய்