Varuvaandi Tharuvandi

Varuvaandi Tharuvandi

Soolamangalam R. Rajalakshmi & M. R. Vijaya

Альбом: Dheivam
Длительность: 3:39
Год: 1972
Скачать MP3

Текст песни

வருவான்டி தருவான்டி மலையாண்டி
வருவான்டி தருவான்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி
அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி
ஆண்டி  வருவான்டி தருவான்டி மலையாண்டி
பழனி மலையாண்டி

சிவனாண்டி மகனாக பிறந்தான்டி
அந்த சிவனாண்டி மகனாக பிறந்தான்டி
அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தான்டி
அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தான்டி

நவலோக மணியாக நின்றான்டி
நவலோக மணியாக நின்றான்டி
என்றும் நடமாடும் துணையாக அமைந்தான்டி
என்றும் நடமாடும் துணையாக அமைந்தான்டி

அவன் தான்டி வருவான்டி தருவான்டி
மலையாண்டி பழனி மலையாண்டி

பாலாபிஷேகங்கள் கேட்பான்டி
சுவை பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பான்டி
பாலாபிஷேகங்கள் கேட்பான்டி
சுவை பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பான்டி

காலார மலையேற வைப்பான்டி
காலார மலையேற வைப்பான்டி
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி
வருவான்டி தருவான்டி மலையாண்டி
பழனி மலையாண்டி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
முருகனின் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
பக்தர்கள் தினம்தோறும் பல கூடி
பக்தர்கள் தினம்தோறும் பல கூடி
திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி
திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி

வருவான்டி  தருவான்டி மலையாண்டி
பழனி மலையாண்டி
பழனி மலையாண்டி
பழனி மலையாண்டி