Lord You Are Good (Feat. Charles Dawson, Candace & Svetha)
Stephen Jebakumar
ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார் ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட ஆதிரையோரையீடேற்றிட. மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து, மரிய கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனுக்குமாரன் வேஷமாய், உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகி மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார், தாம், தாம் தன்னர வன்னர தீம்; தீம், தீமையகற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே, இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட யூதர் சிம்மாசனத்தாளுகை செங்கோல் ஈசாய் வங்கிஷத்தானுதித்தார். – ஆதி மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன் மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார். – ஆதி அல்லைகள், தொல்லைகள் எல்லாம் நீங்கிட அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார். – ஆதி