Dhoothu Varuma (Original Motion Soundtrack)

Dhoothu Varuma (Original Motion Soundtrack)

Sunitha Sarathy & Febi Mani

Длительность: 4:42
Год: 2003
Скачать MP3

Текст песни

தூது வருமா
தூது வருமா
காற்றில் வருமா
கரைந்து விடுமா

தூது வருமா
தூது வருமா
கனவில் வருமா
கலைந்து விடுமா

நீ சொல்ல வந்ததை
சொல்லி விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா

முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா
இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா
இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா

தூது வருமா
தூது வருமா
காற்றில் வருமா
கரைந்து விடுமா

தூது வருமா
தூது வருமா
கனவில் வருமா
கலைந்து விடுமா

நல்லதே நடக்கும் என்றே
சீனத்தின் வாஸ்து அன்றே
பார்த்தேனே வீட்டின் உள்ளே
சிவப்பிலே dragon படமும்
சிரித்திடும் புத்தர் சிலையும்
வைத்தேனே தெற்கு மூலையிலே
பலப்பலத் தடை தாண்டி வந்தாய்
வாஸ்துகள் எல்லாம்
பொய்யே என்றாய்
கொடிய சாத்தானே
என்னைத் தூக்கி சில்லவா

தூது வருமா
தூது வருமா
காற்றில் வருமா
கரைந்து விடுமா

தூது வருமா
தூது வருமா
கனவில் வருமா
கலைந்து விடுமா

கறுப்பிலே உடைகள் அணிந்தேன்
இருட்டிலே காத்துக்கிடந்தேன்
யட்சன் போலே நீயும் வந்தாய்

சரசங்கள் செய்தபடியே
சவுக்கடி கொடுக்கும் யுவனே
வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்
மறுபடி வருவாய் என்று துடித்தேன்
நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா
நீ சொல்ல வந்ததை
சொல்லி விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா
முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா
இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா
இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா
செய்யடா
செய்யடா