Azhagu Azhagu Nee Nadanthal

Azhagu Azhagu Nee Nadanthal

Vairamuthu, S. P. Balasubrahmanyam, & K. S. Chithra

Длительность: 5:11
Год: 1995
Скачать MP3

Текст песни

அழகு அழகு
நீ நடந்தால் நடை அழகு அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு அழகு
நீ பேசும் தமிழ் அழகு அழகு
நீ ஒருவன் தான் அழகு அழகு அழகு

ஓ நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு
அழகு அழகு

பாப பாப பாப பா பப்பா தபநி தா நி ஸ ஸ ஸா
பாப பாப பாப பா பப்பா தபநி தா நி ஸ ஸ ஸா
த நீ த நீ ஸப கக ஸரி தபத நிஸா
ஸகம கரி ஸா தப கம கரி ஸா

சிக்கு சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிலிர்த்துக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்கு சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிலிர்த்துக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்குச்சாம் சிக்கிக்கிச்சாம்

நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல
என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல
உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல

அடி மனம் தவிக்கும் அடிக்கடி துடிக்கும்
ஆசையை திருகிவிடு
இரு விழி மயங்கி இதழ்களில் இறங்கி
உயிர் வரை பருகி விடு
ஓஹோ முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது

அழகு அழகு
ஆ நீ நடந்தால் நடை அழகு அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு அழகு
நீ பேசும் தமிழ் அழகு அழகு
நீ ஒருவன் தான் அழகு
அழகு அழகு

ஓ ஓ ஓஹோஹோ ஹோ ஹோ ஓ
ஓ ஓ ஓஹோஹோ ஹோ ஹோ ஓ
ஓஹோ ஹோ ஹோ ஓ
ஓஹோ ஹோ ஹோ ஓ

நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே
நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே
அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே
என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே

மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு
மது ரசம் அருந்தட்டுமா
விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில்
கவிதைகள் எழுதட்டுமா
முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா
அழகு அழகு

ஓ நீ நடந்தால் நடை அழகு அழகு
நெருங்கி வரும் இடை அழகு அழகு
வேல் எரியும் விழி அழகு அழகு
பால் வடியும் முகம் அழகு அழகு அழகு

ஓ ஓ தங்க முலாம் பூசி வைத்த அங்கம் ஒரு அழகு
தள்ளி நின்று எனை அழைக்கும்
தாமரையும் அழகு
அழகு அழகு அழகு அழகு