Yedho Seigirai

Yedho Seigirai

Yuvan Shankar Raja

Длительность: 4:53
Год: 2009
Скачать MP3

Текст песни

ஏதோ செய்கிறாய்
என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம்
நீ அறிமுகம் செய்கிறாய்

ஏதோ செய்கிறாய்
என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம்
நீ அறிமுகம் செய்கிறாய்

உன்னோடு பேசினால்
உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே
கண்ணாடி பார்க்கையில்
என் கண்கள் உன்னை காட்டுதே

பெண்ணே இது கனவா நிஜமா
உன்னை கேட்கின்றேன்

அன்பே இந்த நிமிடம்
நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா இந்த நெருப்பு
மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே
புதிதாய் தெரிகிறதே

ஓஹோஹ் ஓஓஓ

பெண்ணே எந்தன் கடிகாரம்
எந்தன் பேச்சை கேட்கவில்லை
உன்னை கண்ட நொடியோடு
நின்றதடி ஓடவில்லை

இது வரை யாரிடமும்
என் மனது சாயவில்லை
என்ன ஒரு மாயம் செய்தாய்
என் இடத்தில் நானும் இல்லை

என்ன இது என்ன இது
என் நிழலை காணவில்லை
உந்தன் பின்பு வந்ததடி
இன்னும் அது திரும்பவில்லை

எங்கே என்று கேட்டேன்
உன் காலடி காட்டுதடி

அன்பே இந்த நிமிடம்
நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா இந்த நெருப்பு
மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே
புதிதாய் தெரிகிறதே

காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள
வார்த்தை ஏதும் தேவை இல்லை
மனதில் உள்ள ஆசை சொல்ல
மௌனம் போல மொழி இல்லை

இன்றுவரை என் உயிரை
இப்படி நான் வாழ்ந்ததில்லை
புத்தம் புது தோற்றம் இது
வேறெதுவும் தோன்றவில்லை

நேற்று வரை வானிலையில்
எந்த ஒரு மாற்றமில்லை
இன்று எந்தன் வாசலோடு
கண்டு கொண்டேன் வானவில்லை

ஒரே ஒரு நாளில்
முழு வாழ்க்கை வாழ்ந்தேனே

அன்பே இந்த நிமிடம்
நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா இந்த நெருப்பு
மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே
புதிதாய் தெரிகிறதே

ஏதோ செய்கிறாய்
என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம்
நீ அறிமுகம் செய்கிறாய்

ஏதோ செய்கிறாய்
என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம்
நீ அறிமுகம் செய்கிறாய்