Oru Kan Jaadai

Oru Kan Jaadai

Yuvanshankar Raja

Длительность: 4:23
Год: 2014
Скачать MP3

Текст песни

ஒரு கண் ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே

தரையில் போகும் மேகம் இவளா
மயங்கி பார்த்தேனே
உயிரும் கூச்சல் போடும்
அவள் செய்யும் மாயம் ஓயாதே

ஒரு கண் ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே

வானம் என்றால் தலைக்கு மேலே
இருக்கும் என்று நினைத்திருந்தேன்
எந்தன் வானம் எதிரில் நின்று
புன்னகைத்தாள் மெய்மறந்தேன்

ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே
சாவி உந்தன் விழிகளிலே
அனுமதிக்கும் பார்வை வந்தாலே
அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே

எந்நாளும் வேண்டுமே
உன்னோடு கைகள் சேர்த்து போகும் நெடும் பயணம்
காதல் ஒன்றுதான் இறுதிவரை
வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்
Ok

ஒரு கண் ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே

தொடரும் போட்ட கதையை போல
எந்தன் மாலை முடிகிறதே
உந்தன் கண்கள் பார்க்கத்தானே
எனது காலை விடிகிறதே

வாரம் ஏழு நாளும் உன்னாலே
வானவில்லாய் தெரிகிறதே
உன்னைக்காணா நாட்கள் எல்லாமே
கருப்பு வெள்ளை ஆகிறதே

மின்சாரத் தோட்டமே உன்மேனி
பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி
காதல் செய்யலாம்
முழு பூமி பார்த்த மூச்சை ஆகும்படி

Come on
ஒரு கண் ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே

தரையில் போகும் மேகம் இவளா
மயங்கி பார்த்தேனே
உயிரும் கூச்சல் போடும்
அவள் செய்யும் மாயம் ஓயாதே

நானா நன் நானாநானா நானா நன் நானாநானா
நானா நன் நானாநானா நானா நன் நானாநானா