Ambikapathy

Ambikapathy

A.R. Rahman

Длительность: 4:17
Год: 2013
Скачать MP3

Текст песни

ஓ கங்கையிலே ஒரு வண்ண பறவை
மூழ்கியதே நீரோடு
அந்த பறவை கரை வந்ததே
அந்த பறவை கரை வந்ததே
அதிசயமான தேவதையா

அந்த கங்கை ஆற்றில்
ஒரு வண்ண பறவை
மூழ்கியதே நீரோடு

அது கரையில் வந்ததே
கரையில் வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக

அவளா அவளா பாரு
அவள் அமராவதியா கேளு
அம்பிகாபதிதான் நானு
அமராவதிதான் யாரோ

அம்பிகாபதிதான் நானு
அமராவதிதான் யாரோ
அமராவதிதான் யாரோ

அந்த கங்கை ஆற்றில்
ஒரு வண்ண பறவை
மூழ்கியதே நீரோடு

அது கரையில் வந்ததே
கரையில் வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக

அடி எனக்கு எனக்கு என்று
துடிக்கும் துடிக்கும் மனம்
உனக்கு உனக்கு என்றதே

தினம் தனக்கு தனக்கு என
தவிக்கும் தவிக்கும் உள்ளம்
நமக்கு நமக்கு என்று சொல்லுதே

என்னை கவிஞன் கவிஞன் என்று
கருதி கிடந்த ஒரு கர்வம்
அழிந்து விட்டதே

உன்னை கடக்கும் பொழுது
கண்ணில் அடிக்கும் அழகு
என்னை கடையன் கடையன் என்று தள்ளுதே

காசி நகர் வீதி பக்கம் வாடி
கண்ணில் ஒன்றை பிச்சைப்போட்டு போடி

அவளா அவளா பாரு
அவள் அமராவதியா கேளு
அமராவதியா கேளு

பல குழிகள் கடந்து வலி
நடந்து நடந்து மனம்
விழியில் விழுந்து விடுமே

சிறு பூக்கள் தொடுப்பதற்க்கு
கத்தி உனக்கெதற்க்கு
ஊசி ஒன்று போதுமே

உன்னை நினைத்து நினைத்து
விழி நனைத்து நனைத்து
உடல் இளைத்து இளைத்துவிட்டதே

உயிர் தெரிக்க தெரிக்க
உன்னை துரத்தி துரத்தி
எனை வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே

மண்ணில் வந்தோம்
இன்னொரு பாதி தேடி
நீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி

அந்த கங்கை ஆற்றில்
ஒரு வண்ண பறவை
மூழ்கியதே நீரோடு

அது கரையில் வந்ததே
கரையில் வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக

அவளா அவளா பாரு
அவள் அமராவதியா கேளு
அம்பிகாபதிதான் நானு
அமராவதிதான் யாரோ

அம்பிகாபதிதான் நானு
அமராவதிதான் யாரோ
அந்த கங்கை ஆற்றில்
ஒரு வண்ண பறவை
மூழ்கியதே நீரோடு

அது கரையில் வந்ததே
கரையில் வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக