Edhukku Pulla
Anthony Daasan
4:33ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரோ ஆரிராரோ அப்பனோட தாலாட்டு நீ தூங்க பாடலடா நீ முழிக்க பாடுறேண்டா வம்புதும்பு வச்சுக்காத கோழையாவும் வாழ்ந்திடாத கூட்டு சேர்ந்து கெட்டுடாத கைய கட்டி நின்னுடதா அப்பன் சொல்ல மீறிடாத ஆராரோ ஆரிராரோ அப்பனோட தாலாட்டு நாலு எழுத்து கத்துக்கடா நாலு திசை போயி வாடா நாணயத்தை கத்துக்கிட்டு நாலு காசு சேத்துக்கடா ஊரு என்ன சொல்லுமுன்னு எப்போதும் நீ வாழ்ந்திடதா ஊருக்கென்ன செய்யணுன்னு யோசிக்க நீ மறந்திடாத பாசத்த அதிகம் வெச்சா பைத்தியமா ஆகிடுவ பாசமே இல்லையின்னா பரதேசி ஆகிடுவ அளவா இருந்துக்கடா அழகா வாழ்ந்துக்கடா கவலையை வென்றிடடா கஷ்ட்டபட கத்துக்கடா அப்பன் சொன்னா ஒத்துக்கடா ஆராரோ ஆரிராரோ அப்பனோட தாலாட்டு அம்மாவோட பாசத்த புரிஞ்சுக்க சில மாசம் அண்ணன் தம்பி பாசத்த தெரிஞ்சிக்க சில வருஷம் சொந்தத்தோட பாசத்த புரிஞ்சிக்க சில கஷ்டம் கூட்டாளி பாசத்த தெரிஞ்சிக்க சில நஷ்டம் அவரவர் பாசத்த அப்பப்போ புரிஞ்சிப்ப அப்பனோட பாசத்த அப்பான்னாகி தெரிஞ்சிப்ப வேர்வைய தாய்ப்பால கொடுப்பவன் அப்பனடா கோவத்துல பாசத்த காட்டுறவன் அப்பனடா இப்ப சொன்ன எல்லாமே வார்த்தையில்லை தெரிஞ்சிக்க அப்பன் வாழ்க்கையின்னு புரிஞ்சிக்க ஆராரோ ஆரிராரோ அப்பனோட தாலாட்டு நீ தூங்க பாடலடா நீ முழிக்க பாடுறேண்டா வம்புதும்பு வச்சுக்காத கோழையாவும் வாழ்ந்திடாத கூட்டு சேர்ந்து கெட்டுடாத கைய கட்டி நின்னுடதா அப்பன் சொல்ல மீறிடாத ஆராரோ ஆரிராரோ அப்பனோட தாலாட்டு ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ