Thaniya Naan (From "Romeo")

Thaniya Naan (From "Romeo")

Barath Dhanasekar

Длительность: 4:27
Год: 2024
Скачать MP3

Текст песни

தனியா நான் நிக்கிறேன் இளமையே
தனி ஆடா சுத்துறேன் கொடுமையே
துணை எந்தன் முன் தனிமையே தனிமையே
வெறி ஏறும் நிலமையே நிலமையே

ஏன் கண்ணுமுன்ன உள்ள பையனெல்லாம் ஜோடி போட்டு போறாங்கடா
ஏன் ஆசையெல்லாம் மூட்டக்கட்டி புட்டு ஒப்பாரி வச்சேனடா
யார் கண்ணுப்பட்டு நான் கன்னி ராசி இல்லாம போனேனடா
ஏன் இம்சையெல்லாம் கஷ்டமுன்னு விட்டு சன்யாசி ஆனேனடா

வாழ்க்கையே கடந்து பற்றி போக ஆறுதல் தேடாமல் நானில்லையே
என்றுமே கனவெல்லாம் கண்மூடும் முன்பு தான்
ஆழ்மனம் பாவமே என்ன செய்யும்

என் காதல் கதை தொடங்கவே மறுக்குதே
தன்னந்தனியாகவே வாழ்க்கையும் வெறுக்குதே
ஊரே மொத்தமாக ஒன்னு கூடி எப்போ தம்பி கல்யாணம் எப்போ தம்பி கல்யாணம்
தப்பிச்சு ஓடி போகும் முன்னாடி
வயசு என்ன சொல்லு தம்பி வயசு என்ன சொல்லு தம்பி

சொல்லி தொலைச்சு முடிச்ச பின்னாலும்
இன்னுமா நீ ஒண்டிக்கட்ட இன்னுமா நீ ஒண்டிக்கட்ட
ஆல விட்டா போதுமுன்னு
கைய தூக்கி கும்பிட்டுட்டு கால தூக்கி வேண்டிகிட்டேன்

வாழ்க்கையே கடந்து பற்றி போக ஆறுதல் தேடாமல் நானில்லையே
என்றுமே கனவெல்லாம் கண்மூடும் முன்பு தான்
ஆழ்மனம் பாவமே என்ன செய்யும்