Ennai Kollathey

Ennai Kollathey

Ztish, Kumaresh, & Keshini

Альбом: Geethaiyin Raadhai
Длительность: 5:24
Год: 2016
Скачать MP3

Текст песни

என்னை கொல்லாதே
தள்ளிப் போகாதே
நெஞ்சைக் கிள்ளாதே
கண்மணி

சொன்ன என் சொல்லில்
இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள்
சொல்லடி

உன்னைத் தீண்டாமல்
உன்னைப் பார்க்காமல்
கொஞ்சிப் பேசாமல்
கண்ணில் தூக்கமில்லை

என்னுள் நீ வந்தாய்
நெஞ்சில் வாழ்கின்றாய்
விட்டுச் செல்லாதே
இது நியாயமில்லை

ஆஆ...ஆஆ...ஆஆ..ஆஆ

கண்ணை மூடி கொண்டாலும்
உன்னைக் கண்டேன்
மீண்டும் ஏன் இந்த ஏக்கம்

வெள்ளை மேகத் துண்டுக்குள்
எழும் மின்னல் போல்
எந்தன் வாழ்வெங்கும் மின்னல்

என் இதழ் மேல் இன்று
வாழும் மௌனங்கள்
என் மனம் பேசுதே
நூறு எண்ணங்கள்

சொன்ன சொல்லின் அர்த்தங்கள்
என்னுள் வாழுதே
தூரம் தள்ளிச் சென்றாலும்
உயிர் தேடுதே

ஆசை வார்த்தை எல்லாமே
இன்று கீறலாய்
எந்தன் நெஞ்சின் ஓரத்தில்
பாயச் செய்கிறாய்

என்னுள் நீ வந்தாய்
இன்னும் வாழ்கின்றாய்
உந்தன் சொல்லாலே
தூரம் உண்டாக்கினாய்

என்னைத் தீண்டாதே
என்னைப் பார்க்காதே
ஒன்றும் பேசாதே
போதும் துன்பங்கள்

திரன தோம்த திரன தோம்த திரனா
திரன தோம்த திரன தோம்த திரனா
திரன தோம்த திரன தோம்த திரனா
திரன தோம்த திரன தோம்த திரனா

திரன தோம்த திரன தோம்த திரனா
திரன தோம்த திரன தோம்த திரனா
திரன தோம்த திரன தோம்த திரனா
திரன தோம்த திரன தோம்த திரனா

என்னை விட்டுச் செல்லாதே
எந்தன் அன்பே
வேண்டும் உன் காதல் ஒன்றே

உன்னை மட்டும் நேசித்தேன்
இது உண்மை
இன்னும் ஏன் இந்த ஊடல்

என் உயிர் காதலை
உந்தன் காதோரம்
ஒரு முறையாவது
சொல்ல நீ வேண்டும்

எந்தன் ஆசை முத்தங்கள் (ஆஆஆ)
உன்னைச் சேருமோ (ஆஆஆ)
இல்லை காதல் யுத்தங்கள் (ஆஆஆ)
இன்னும் நீளுமோ (ஆஆஆ)

உந்தன் கண்ணில் நீ சிந்தும்
ஈரம் ஏனடி
நெஞ்சில் பாரம் வேண்டாமே
என்னை பாரடி

என்னைக் கொள்ளாதே
தள்ளிப்போகாதே
நெஞ்சைக்கிள்ளாதே
கண்மணி

சொன்ன என் சொல்லில்
இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி

ஆஆ...ஆஆ...ஆஆ..ஆஆ

என்னைக்கொல்லாதே  (ஆஆஆ)
தள்ளிப்போகாதே (ஆஆஆ)
நெஞ்சைக்கிள்ளாதே கண்மணி (ஆஆஆ)

சொன்ன என் சொல்லில் (ஆஆஆ)
இல்லை உண்மைகள் (ஆஆஆ)
ஏனோ கோபங்கள் சொல்லடி (ஆஆஆ)