Oru Poo Ezhuthum Kavithai

Oru Poo Ezhuthum Kavithai

Bharadwaj

Длительность: 5:27
Год: 2022
Скачать MP3

Текст песни

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஓவியமாய் விரியும்

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஓவியமாய் விரியும்

உலகத்தின் மெல்லிய தாள்களின் மேலே
இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்
அழகிய இதழ் கொண்டு வா

முத்தம் என்பது நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்

ஊசி துளைத்த குமிழிகள் போலே
உடைவது உடைவது வாழ்வு
காற்று துரத்தும் கடலலை போல
தொடர்வது தொடர்வது காதல்

உடல் மீது கொஞ்ச காலம்
இளைப்பாறும் காதலே
உடல் தீர்ந்து போன பின்னும்
உயிர் வாழும் காதலே

காலங்கள் எங்கு தீரும்
அதுவரை செல்வோமா?
காலங்கள் தீருமிடத்தில்
புது ஜென்மம் கொள்வோமா?

உன் மூச்சிலே நானும்
என் மூச்சிலே நீயும்
காற்றில் ஒலிகள் கேட்கும் வரையில்
காதல் கொள்வோமா?

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஓவியமாய் விரியும்

கண்கள் இருக்கும் பேர்களுக்கெல்லாம்
சூரியன் மட்டும் சொந்தம்
காதல் இருக்கும் பேர்களுக்கெல்லாம்
சூரியக்குடும்பம் சொந்தம்

உலகம் திறந்து வைத்த
முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான்
இன்னும் அந்த தேடல் தான்

சுடர் கோடி எதற்கு வந்தோம்
தொலைத்ததை காணத்தான்
உதட்டினில் தொடங்கி அந்த
உயிர் சென்று தேட தான்

நீ என்பதும் பாதி
நான் என்பதும் பாதி
உன்னில் என்னை என்னில் உன்னை
ஊற்றி கொள்வோமா?

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஓவியமாய் விரியும்

உலகத்தின் மெல்லிய தாள்களின் மேலே
இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்
அழகிய இதழ் கொண்டு வா

முத்தம் என்பது நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்
முத்தம் என்பது நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்