Soru Kondu Pora

Soru Kondu Pora

Chitra & S.P.Balasubramaniam

Альбом: En Aasai Machan
Длительность: 3:52
Год: 1994
Скачать MP3

Текст песни

சோறு கொண்டு போறப்புள்ள
அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல
கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
சோறு கொண்டு போற புள்ள
அந்த சும்மாட இறக்கு

வேணாங்க வேணாங்க
இங்க வேணாம் வேணாங்க

ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான்
சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு

சோலக்குயில் பாடுதம்மா
சொந்தங்களை சொல்லிச் சொல்லி
வேளை வந்து விரட்டுதம்மா
இந்த நெஞ்ச அள்ளி அள்ளி
சேலகட்டும் செவத்த பொண்ணு
சின்னப்பொண்ணு செல்லக்கண்ணு
மாலை போட வேணுமுன்னு
மாமங்கிட்ட மயங்கும் நின்னு

சித்திரை முடிஞ்சதுன்னா
சேரும் அந்த வைகாசி
அந்த நேரம் தெரியுமடி
மச்சானோட கைராசி

காத்திருக்கேன் ராப்பகலா
எப்பவரும் வைகாசி?

சோறு கொண்டு போறப்புள்ள
அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல
கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
சோறு கொண்டு போற புள்ள
அந்த சும்மாட இறக்கு

ஆ-ஆ-ஆ-ஆ (ர்ர்ர்ரா)
ஆ-ஆ-ஆ-ஆ (கே-கே-கே)

ஆசைப்பட்டு நேசப்பட்டு
ஊர் முழுக்கப் பேசப்பட்டு
வாங்கித் தாரேன் கூரைப்பட்டு
வாடி புள்ள வாக்கப்பட்டு
கண்ணிப்பொன்னு சின்னச்சிட்டு
காத்திருக்கேன் இஷ்டப்பட்டு
என்னத் தொட்டு இழுத்துப்புட்டு
இஷ்டம் போல அள்ளிக்கட்டு

கிட்ட வந்து சிக்கிக்கிட்டு
தொட்ட போது வெட்கப்பட்டு
கட்டழக கட்டிக்கிட்டு
கட்டிலிலே மல்லுகட்டு

கூச்சப்பட்டு பூத்த மொட்டு
கும்புடுது காலத்தொட்டு

சோறு கொண்டு போறப்புள்ள
அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல
கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு

ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான்
சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு