Kodiyile Malliyapoo

Kodiyile Malliyapoo

Composer: Ilaiyaraaja, Lyricist: Vairamuthu, & Singer: P. Jayachandran, S. Janaki

Длительность: 4:15
Год: 1986
Скачать MP3

Текст песни

அடி ஆத்தாடி
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி அம்மாடி
நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
விழி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி ஆத்தாடி

ஆஆ...ஆஆ...ஆஆ

சொந்தம் என்ன சொந்தம் என்று
சொல்லவில்லை அப்போது
பக்கம் வந்து பார்த்துச் சொல்ல
இறக்கை இல்லை இப்போது
காதல் வந்து சேர்ந்த போது
வார்த்தை வந்து சேரவில்லை
வார்த்தை வந்து சேர்ந்த போது
வாழ்க்கை ஒண்ணு சேரவில்லை
பூசைக்காக போன பூவு
பூக்கடைக்கு வாராது
கற்றுத் தந்த கண்ணே
உன்னைக் குற்றம் சொல்லக் கூடாது
மனம் தாங்காது ஓஓஒ

அடி அம்மாடி
நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
அடி ஆத்தாடி நீ போகும் பாதை
எங்கே பொன்மானே

கண்ணே இது ஊமைக்காதல்
காத்திருந்து நொந்தேனே
தண்டனைக்குப் பின்னே நீயும்
சாட்சி சொல்ல வந்தாயே
காத்திருந்து ஆனதென்ன
கண்ணீர் வற்றிப் போனதென்ன
தேர் முறிஞ்சு போனபின்னே
தெய்வம் வந்து லாபமென்ன
என்ன சொல்லி என்ன பெண்ணே
என்னைச்சுற்றி ஏகாந்தம்
பாறாங்கல்லில் முட்டிக்கொண்டு
முட்டைக்கென்ன வேதாந்தம்
இனி பூகம்பம் ஓஓஓ

அடி ஆத்தாடி
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி அம்மாடி
நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
விழி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி ஆத்தாடி