Raasithan

Raasithan

Chitra & S.P.Balasubramaniam

Альбом: En Aasai Machan
Длительность: 5:06
Год: 1994
Скачать MP3

Текст песни

ராசிதான் கை ராசிதான்
உன் முகமே ராசிதான்

ராசிதான் கை ராசிதான்
உன் முகமே ராசிதான்
ராசிதான் கை ராசிதான்
உன் முகமே ராசிதான்

ஆத்தாடி உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவ இவதான் தெரியாதா
பூச்சூடி உன் நெனப்புல மிதப்புல
இருப்பவ இவதான் புரியாதா

எந்நாளுமே என் ஆசை மச்சானே
உன் கூடதான் நான் இருப்பேன்
உன் துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப் பிறந்தேனே

ராசிதான் கை ராசிதான்
உன் முகமே ராசிதான்

ராசிதான் கை ராசிதான்
உன் முகமே ராசிதான்

ஊர்சனம் வாழ்த்தும் ராசகுமரன்
உனக்கு ஒரு குறையேது
மாமன் இல்லாத பூமியின் மீது
எனக்கு ஒரு துணை ஏது

கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ
கையோடு அணைச்சேனே
என் பேரை மறந்து உன் பேரைத்தானே
எப்போதும் நினைச்சேனே

பனி பூப்போல் சிரிக்குது
பால் போல் இருக்குது
பாவை மனம்தானே

ராசிதான் கை ராசிதான்
உன் முகமே ராசிதான்
ராசிதான் கை ராசிதான்
உன் முகமே ராசிதான்

வீசுற காத்தும் வயல் வெளி நாத்தும்
படிக்குது எசப் பாட்டு
ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும்
துடிக்குது அதைக் கேட்டு

ஒன்னாக கலந்து சந்தோஷ உறவு
எந்நாளும் விலகாது
கண்ணாடி போலே கல்லால அடிச்சா
தண்ணீரும் உடையாது

பட்டு பாய போட்டது
பன்னீர் தூவுது
பூக்கள் நமக்காக

ராசிதான் கை ராசிதான்
உன் முகமே ராசிதான்
ராசிதான் கை ராசிதான்
உன் முகமே ராசிதான்

ஆத்தாடி
உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவன்
இவன்தான் தெரியாதா
பூச்சூடி
உன் நெனப்புல மிதப்புல இருப்பவன்
இவன்தான் புரியாதா

எந்நாளுமே என் ஆசை மச்சானே(ம்ம் ம்ம்)
உன் கூடத்தான் நான் இருப்பேன்
உன் துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப் பிறந்தேனே

ராசிதான் கை ராசிதான்
உன் முகமே ராசிதான்
ராசிதான் கை ராசிதான்
உன் முகமே ராசிதான்