Vaa Saamy (From "Annaatthe")

Vaa Saamy (From "Annaatthe")

D Imman, Mukesh Mohamed, Nochipatti Thirumoorthy, And Keezhakarai Samsutheen

Длительность: 4:13
Год: 2021
Скачать MP3

Текст песни

சாட்ட எடுத்துகிட்டு
வேட்டி மடிச்சிக்கிட்டு
எதிரிய எருவென
எரி எரி எரிடா

கன்னங் கருப்பிருட்டு
கடுவாய் புலிவெரட்டு
கயவரின் கதையினை
முடி முடி முடிடா

போடு போடு

வீச்சருவா கொண்ட கொல குலசாமி
வந்துருச்சே பகைக் கொலை நடுங்க

வா சாமி வா சாமி

கெட்டவன அது பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொட நடுங்க

வா சாமி வா சாமி

திமுதிமு குதிரைகள் திமிறிவர
ஒரு வேட்டைகள் நடக்கிறதே
கரு கரு தருமத்தின் தலைவனிடம்
உன் ஆட்டங்கள் முடிகிறதே

மீசைய பாரு
கெடா கெடா
மிருகத்த அழிக்க
வர்றானடா
குருதியக் குடிப்பான்
மொடா மொடா
கொடியவர் கூட்டம்
ஒடுங்கடா

வீச்சருவா கொண்ட கொல குலசாமி
வந்துருச்சே பகைக் கொலை நடுங்க

வா சாமி வா சாமி

கெட்டவன அது பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொட நடுங்க

ஓஓஓஓ ஓஓஓஓ மொகன மொகன

வெள்ள குதிரயில வேட்ட தொடங்கையில
நரிகளின் நரித்தனம்
ஒடு ஒடு ஒடுங்கும்
வேங்க திமிறையில வேகம் எடுக்கையில
பகைவனின் தொடைகளும்
நடு நடு நடுங்கும்

வா சாமி வா சாமி

வா சாமி வா சாமி

கரகரம் கரகரம் கரகரம் கரகரம்

உக்கிரங்கள் ஒன்றுபட
உச்சிவானம் ரெண்டுபட
உருமாக் கட்டி ஊரக் காக்க
வாரான் வாரான் வாரான்
மதுர வீரன் மதங்கொண்டு வாரான்

சந்ததிய காத்து நிக்க
சங்கடங்கள் தீத்து வைக்க
பாவக் கணக்க தீத்துக் கட்ட
வாரான் வாரான் வாரான்
மதுர வீரன் மதங்கொண்டு வாரான்

நெருப்புக் கண்ணில் எரியுதடா
எதுத்து நிக்க யாரு
நெருங்கி வரும் வினைகளெல்லாம்
தவிடு பொடியாக்கு

மீசையப் பாரு
கெடா கெடா
மிருகத்தை அழிக்க
வர்றானடா
குருதியக் குடிப்பான்
மொடா மொடா
கொடியவர் கூட்டம்
ஓடுங்கடா

வீச்சருவா கொண்ட கொல குலசாமி
வந்துருச்சே பகை கொலை நடுங்க

வா சாமி வா சாமி

கெட்டவன அது பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொட நடுங்க

வா சாமி வா சாமி

அடி அடி இடியென தரதெறிக்க
ஒரு தாண்டவம் நடக்கிறதே
பிட பிட பிடரியை இழுத்து வர
பெரும் பிரளயம் வெடிக்கிறதே

சலங்கைகள் ஆடுது
சடா சடா
சடையினில் இறுக்கிட
வர்றானடா
உடுக்கையின் ஓசை
விடா விடா
உருமிய ஓங்கி
அடிங்கடா

மீசையை பாரு
கெடா கெடா
மிருகத்தை அழிக்க
வர்றானடா
குருதியை குடிப்பான்
மொடா மொடா
கொடியவர் கூட்டம்
ஓடுங்கடா

வா சாமி