Jeevan Neeye (From "Martin") (Tamil)

Jeevan Neeye (From "Martin") (Tamil)

Haricharan

Длительность: 3:56
Год: 2024
Скачать MP3

Текст песни

ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு
ஏழு வண்ண வானவில் கண்ணோடு

எதிரிலே நீ வர இன்பமே கூடுதே
இதயத்தின் வாசலில் தென்றலாய் வீசுதே

இதே நேசம் இதே வாசம் என்றும் வேண்டுமே

ஜீவன் நீயே ஜீவன் நீயே
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ

ஜீவன் நீயே ஜீவன் நீயே
என் உயிர் உந்தன் தஞ்சமோ

ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு
ஏழு வண்ண வானவில் கண்ணோடு

ஆஆ...ஆஆ..ஆஆஆ..ஆஆ

ஆண் மலரென்றால் நீதானடா
நீ சிரித்த நொடிகளே மழைதானடி

எந்த கடவுள் தந்த வரமோ
நீ என்னை சேர்ந்தது

என்னை இந்த உலகில் படைத்ததே
காதலில் விழுந்து உருகவா

சிறு கண்ணாடி நான் உன் பிம்பமே
எந்நாளும் ஏந்தி வாழ்வேன்

அடி ஆகாயமே உன் மீதிலே
வெண்மேகம் ஆகி சாய்வேன்

ஜீவன் நீயே ஜீவன் நீயே
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ

ஜீவன் நீயே ஜீவன் நீயே
என் உயிர் உந்தன் தஞ்சமோ

ஆஆ...ஆஆ..ஆஆஆ..ஆஆ

நீ பார்த்ததும் உயிர் தாவுதோ
என் கடலின் அலையெல்லாம் உன்னை தேடுதோ

உன்னை நினைத்து உறங்க சென்றால்
இமைகளும் மறுக்குதே

கருவறை குழந்தை போலவே
காதலில் நானே வாழ்கிறேன்

அட என் ஆயுளே உன் கையிலே
நீ மட்டும் போதும் அன்பே

அடி மண்மூடிடும் அந்நாளிலும்
உன் வாசம் தேடும் நெஞ்சே

ஜீவன் நீயே ஜீவன் நீயே
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ

ஜீவன் நீயே ஜீவன் நீயே
என் உயிர் உந்தன் தஞ்சமோ