Enna Ithuvo

Enna Ithuvo

Hariharan

Альбом: Aanandham
Длительность: 4:35
Год: 2025
Скачать MP3

Текст песни

ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்

என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்

நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ… தென்றல் பெண்ணே இது காதல்தானடி
உன் கண்களோடு இனி மோதல்தானடி

என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே
கண்களால் சுவாசிக்க கற்று தந்தது

பூமியே சுழல்வதாய் பள்ளிக்கூடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது

ஓஹோ… காதலி என் தலையணை
நீ என நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால் அதை தினம் தினம்
மார்புடன் அணைத்துக் கொள்வேன்

கோடைக் கால பூங்காற்றாய்
எந்தன் வாழ்வில் வீசுவாய்

என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்

தரிக்கிட தோம் தோம் அஹ்ஹ்
தரிக்கிட தோம் தோம் அஹ்ஹ்
தரிக்கிட தோம் தோம் அஹ்ஹ்
தரிக்கிட தோம் தோம் அஹ்ஹ் (தரிக்கிட தோம் தோம்)

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்

கோயிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்

ஓஹோ… காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்
சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்

உன்னை பார்க்கும் நாள் எல்லாம்
சுவாசக் காற்று தேவையா

என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்

நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ… தென்றல் பெண்ணே இது காதல்தானடி
உன் கண்களோடு இனி மோதல்தானடி(ம்ம்மம் )