Mookuthi Muthazhaghu

Mookuthi Muthazhaghu

Hariharan

Длительность: 5:00
Год: 2025
Скачать MP3

Текст песни

மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு

பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு

மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
பொட்டழகு பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
பல்லழகு பல்லழகு

பத்து விரல் பூவழகு
பாதம் தங்க தேரழகு
பத்து விரல் பூவழகு
பாதம் தங்க தேரழகு

வானம் விட்டு மண்ணில் வந்த
நிலவல்ல பெண்ணழகு

மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
பொட்டழகு பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
பல்லழகு பல்லழகு

மருதாணி கொடி போல
மவுசாக அவ நடப்பா
ஆஹா என்ன நடையோ
ஆஹா அன்ன நடையோ

மழை பெஞ்ச தரை போல
பதமாக தானிருப்பா
ஆஹா என்ன அழகோ
ஆஹா வண்ண மயிலோ

வலை வீசும் கண்ணழகு
வளைந்தாடும் இடையழகு
கருநாகக் குழல் அழகு
கற்கண்டு குரல் அழகு

மலையாள மலையில் மலர்ந்த
மலர்க்காடு முள்ளழகு

மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
பொட்டழகு பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
பல்லழகு பல்லழகு

ஜூம் ஜுஜும் ஜூம் ஜுஜும் ஜூம் ஜுஜும்

ஹே ஹே ஹே ஹே
கொண்டவனே கோயில் எனும்
குலமகளா அவள் இருப்பா
ஆஹா நல்ல மனசு
ஆஹா தங்க மனசு

தன் முகத்தெப் பார்ப்பதற்கும்
என் முகத்தில் அவள் முழிப்பாள்
ஆஹா ரொம்ப புதுசு
அய்யாக்கேத்த பரிசு

கார்த்திகையில் வெயில் தருவா
சித்திரையில் மழை தருவா
விண்மீன்கள் சேர்த்து வைத்து
வீட்டில் விளக்கேற்றி வைப்பாள்

தாயைப்போல பாசம் சொல்லி
தமிழ்பெண்ணாய் வாழ்ந்திருப்பாள்

மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
பொட்டழகு பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
பல்லழகு பல்லழகு

பத்து விரல் பூவழகு
பாதம் தங்க தேரழகு
பத்து விரல் பூவழகு
பாதம் தங்க தேரழகு

வானம் விட்டு மண்ணில் வந்த
நிலவல்ல பெண்ணழகு

மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
பொட்டழகு பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
பல்லழகு பல்லழகு