Vilambara Idaiveli (From "Imaikkaa Nodigal")

Vilambara Idaiveli (From "Imaikkaa Nodigal")

Hiphop Tamizha

Длительность: 4:34
Год: 2018
Скачать MP3

Текст песни

ஒளி இல்லா உன் மொழிகள்
விடை தேடும் என் விழிகள்
இமைக்காத நம் நொடிகள்
கடிகார தேன் துளிகள்

அடி வாயார உன் காதல் நீ சொல்லடி
வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி(வேண்டாமடி)
மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி(அனுப்பாதடி)
கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி

விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்

நான் உனதே அடி நீ எனதா
தெரியாமல் நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்

காதல் பூவை நான் ஏற்று கொண்டால்
உன் காத்திருப்பு நிறைவாகுமே
காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்
நம் கால் தடங்கள் அவை திசை மாறுமே

இவளின் கனவோ உள்ளே ஒளியும்
இரவும் பகலும் இதயம் வழியும்
வழியும் கனவு இதழை அடையும்
எந்த காட்சியில் அது வார்த்தை ஆகிடும்

விளம்பர இடைவெளி மாலையில்(மாலையில்)
உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்(வேளையில்)
என் நிறமற்ற இதயத்தில் வானவில்(வானவில்)
அடி என்ன நிலை உந்தன் மனதில்(உந்தன் மனதில்)

நிலமெல்லாம் உன் தடமே
நிலவெல்லாம் உன் படமே
நிஜமெல்லாம் உன் நிறமே
நினைவெல்லாம் உன் நயமே ஹே

மதுரம் கொஞ்சும் இளைஞன் நீயோ( நீயோ)
மதமே இல்லா இறைவன் நீயோ( நீயோ)
வயத்தை கடிக்கும் குழந்தை நீயோ( நீயோ)
வரம்பு மீறலோ எனை தொடரும் தூறலோ

நான் உனதே  நீ எனதா
தெரியாமலே  நான்  தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்

நான் உனதே  நீ எனதா
தெரியாமலே  நான்  தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே(ஒஹ்ஹ ஒஹ்ஹ )
என் மோக பார்வைய நான் மூடுவேன்