Anai Kondu Thaduthaalum (From "Uppu Puli Kaaram")
K C Balasarangan & Rajeevi Ganesh
4:41இரண்டு மனம் இணைய இணைய இணைய பிறந்த பயன் அடைய அடைய அடைய ஊர் பார்க்க, கைகோர்க்கும் நாள் வந்ததே ! எந்நாளும் அன்போடு ஆனந்தமே ! என் கூட்டிலே ஒரு ஓரமாய் இருந்தேனடா கண்ணா வரமாகவே நீ வந்ததால் திளைத்தேனடா திசையின்றி நான் தேடித் திரிந்தேன் தனியாகவே கண்ணே ஒளியாக நீ எனைச் சேர்ந்ததால் பிழைத்தேனடி கனவிலும் கண்டிராதொரு காட்சி ஒன்றினை இன்று பார்க்கிறேன் நிஜமிது என்று நானுமே நம்பிடாமலே கிள்ளிப் பார்க்கிறேன் இருக்கும் காலம் யாவும் உந்தன் அணைப்பினில் நீ எந்தன் செல்லச் சிணுங்கலில் அணைகொண்டு தடுத்தாலும் நில்லா புனல் இது புனல் இது - இன்பக் கனல் இது கனல் இது - காதல் ! அணைகொண்டு தடுத்தாலும் நில்லா புனல் இது புனல் இது - இன்பக் கனல் இது கனல் இது - காதல் ! இரண்டு மனம் இணைய இணைய இணைய பிறந்த பயன் அடைய அடைய அடைய ஊர் பார்க்க, கைகோர்க்கும் நாள் வந்ததே ! எந்நாளும் அன்போடு ஆனந்தமே !