Irandu Manam (Original Soundtrack From "Uppu Puli Kaaram")
K C Balasarangan
3:09அணைகொண்டு தடுத்தாலும் நில்லா புனல் இது புடம் போட்ட தங்கக் கனல் இது கனல் இது காதல் இனவாதம் பேசாது காதல் மொழிபேதம் பார்க்காது காதல் இனம்புரியா சந்தோஷம் காதல் - காதல் பகலிரவு நோக்காது காதல் பலபோர்கள் உண்டாக்கும் காதல் பலபேர்க்குப் புரியாது காதல் - காதல் ஏனென்று தெரியாமல் வருமே தெரிந்தாலே புதிர் போயிவிடுமே புதிரான மானுடப் புதையலே காதல் காதல் காதல் அணைகொண்டு தடுத்தாலும் நில்லா புனல் இது புடம் போட்ட தங்கக் கனல் இது கனல் இது காதல் நின் இதழ்களின் செழிப்பினில் இமைகளின் அழைப்பினில் இனிமைகள் முழுவதும் உனில் மட்டும் கண்டிட எனையே மறந்திடும் எரிபொருள் தேடிட கல்லையும் கவியாய் ஆக்கும் காதலே கடல்கொள்ளும் நிலம்போல உன்னில் கலந்தேனே எனை நானும் கண்ணே மறந்தேனே மறந்தேனே உன்னாலே ஓ… நிலம்கொள்ளும் கடல்போல உன்னில் கலந்தேனே எனை நானும் கண்ணே மறந்தேனே இறை நிலை கொண்டேனே! இறை நிலை கொண்டேனே!