Konja Naal Poru
Deva
5:11K. S. Chithra, S.A. Rajkumar, Vaali, Kalidasan, And Rama Narayanan
ஆடி வந்தேன் ஆடி வந்தேன் அஞ்சு குடைக்காரி பாடி வந்தேன் பாடி வந்தேன் பாண்டியனார் தேவி தேடி வந்தேன் தேடி வந்தேன் தேன் வடிக்கும் பூவ நான் இருக்கும் கோயிலுக்கு நாளும் அது தேவை நான் பாம்பு என வேம்பு என மாறுகிற சாதி மாரி இவ சந்நிதியில் மாறாது நீதி ஊரறியும் உலகறியும் கேட்டுபாரு நீயே மாயவேலை ஆகாதம்மா நானே ஒரு மாயை தொட்டியத்தில் அழகு தில்லையில் திருச்சி நகர் உறையூரில் காளியென்று கோயில் கொண்டு கொலுவிருக்கும் அம்மனும் நானே பண்ணாரியில் சமயபுரத்தில் புஞ்சை வளர் தஞ்சையினில் மாரி என்று பெயர் படைத்து மக்களை காக்கும் அன்னையும் நானே அகிலமும் சுழலாதா அடியே என் பிடியினிலே அதிசயம் நிகழாதா நினைச்சா ஒரு நொடியினிலே கைகளில் சக்கரம் சங்கை கொண்ட கோவிந்தராஜனின் தங்கை வார்சடை மீதினில் கங்கை கொண்ட வள்ளலும் அள்ளிடும் நங்கை ஆடி வந்தேன் ஆடி வந்தேன் ஆடி வந்தேன் அஞ்சு குடைக்காரி தேடி வந்தேன் தேடி வந்தேன் தேன் வடிக்கும் பூவ நான் இருக்கும் கோயிலுக்கு நாளும் அது தேவை பம்பை சத்தம் முழங்கும் வேளையில் பம்பரமா ஆடிகிட்டு பாம்பு புத்து நீங்கி வந்த பைரவி நான் பாரடி அம்மா வேப்பஞ்சேலை இடுப்பில் கட்டுற வஞ்சியர்க்கு வாழ்வு தந்து வாழ வைக்க என்னை விட்டா வையத்திலே யாரடி அம்மா கருங்கல்லு சிலைதான்னு எளிதா நீயும் நினைக்காதே கொடுப்பத கொடுக்காம மறச்சா இங்கு நடக்காதே பூவையே பூவையே கேளு நான் சொல்லுறேன் சொல்லுறேன் புத்தி பூமியில் ஏதடி கூறு இந்த சக்திய மிஞ்சுற சக்தி ஆடி வந்தேன் ஆடி வந்தேன் ஆடி வந்தேன் அஞ்சு குடைக்காரி தேடி வந்தேன் தேடி வந்தேன் தேன் வடிக்கும் பூவ நான் இருக்கும் கோயிலுக்கு நாளும் அது தேவை நான் பாம்பு என வேம்பு என மாறுகிற சாதி மாரி இவ சந்நிதியில் மாறாது நீதி ஊரறியும் உலகறியும் கேட்டுபாரு நீயே மாயவேலை ஆகாதம்மா நானே ஒரு மாயை