Vayasu Ponnuthan

Vayasu Ponnuthan

K. S. Chithra

Длительность: 4:20
Год: 2019
Скачать MP3

Текст песни

ஓய் மாமோய்

வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது
மாமா சின்ன மாமா

குருவி குஞ்சிதான் இந்த கத்திரி பிஞ்சுதான்
உன்ன நெருங்கி நிக்குது நெனைச்சி சொக்குது
மாமா சின்ன மாமா

உனக்காகத்தான் சமைஞ்சி நின்னேனே
சரி ஜோடியா அமைஞ்சி நின்னேனே

அடடா வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது
மாமா சின்ன மாமா

காளை மாடு மொறைக்குமா
கறவை மாட்டையும் வெறுக்குமா
மாமனுக்கு வெவரமா விளக்கி சொல்லணுமா

ஆ கொண்டை சேவல் வெறைக்குமா
கோழி வந்ததும் வெரட்டுமா
மூக்கு வச்சி உரசுனா மறுப்பு சொல்லிடுமா

அட ராப்போது ஆனா இந்த பூ வாடுது
இந்த மகராசன் பேர சொல்லி போராடுது
இதை ஏய்யா நீ பாக்கல அது என்னான்னு கேக்கல

வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது
மாமா சின்ன மாமா

குருவி குஞ்சிதான் இந்த கத்திரி பிஞ்சுதான்
உன்ன நெருங்கி நிக்குது நெனைச்சி சொக்குது
மாமா சின்ன மாமா

ஹேய் பாக்குறப்போ அசத்துற
பருவ நெஞ்சையும் உசுப்புற
ஆக மொத்தம் படுத்துற
ஆட்டி வைக்கிறியே மாமா

எரிச்சல கெளப்புற
எதுக்கு என்ன புழியுற
வேணுமுன்னு விரும்பினா விலகி நிக்குறியே

என்ன மார் மேல வாங்கி மெல்ல தாலாட்டணும்
ரெண்டு தோள் மேல தாங்கி அள்ளி சீராட்டணும்
ஒரு மாமாங்கம் ஆனாலும் மாமா நான் விடமாட்டேன்

வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது
மாமா சின்ன மாமா

குருவி குஞ்சிதான் இந்த கத்திரி பிஞ்சுதான்
உன்ன நெருங்கி நிக்குது நெனைச்சி சொக்குது
மாமா சின்ன மாமா

உனக்காகத்தான் சமைஞ்சி நின்னேனே
சரி ஜோடியா அமைஞ்சி நின்னேனே

அடடா வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது
மாமா சின்ன மாமா