Neeyoru Puzhayay (From "Thilakkam")
P. Jayachandran
3:51வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் புதுமுகமான மலர்களை நீந்தி நதிதனில் ஆடி கவி பல பாடி அசைந்து அசைந்து ஆடுங்கள் அசைந்து அசைந்து ஆடுங்கள் ஆ... ஆ... ஆ... வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் கருவண்டு நடனம் தருகின்ற நளினம் இதயத்தில் சலனம் அம்மம்மா... அம்மம்மா... கருவண்டு நடனம் தருகின்ற நளினம் இதயத்தில் சலனம் அம்மம்மா... அம்மம்மா... அம்மம்மா... அம்மம்மா... உன் மைவிழிக் குளத்தினில் தவழ்வது மீனினமோ கவி கண்டிட மணத்தினில் கமழ்வது தமிழ் மனமோ உன் மைவிழிக் குளத்தினில் தவழ்வது மீனினமோ கவி கண்டிட மணத்தினில் கமழ்வது தமிழ் மனமோ செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள் ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள் மலையில் நெளியும் மேகக் குழல்கள் தாகம் தீர்த்திடுமோ பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ நெஞ்சம் தாங்கிடுமோ... ஆ... ஆ... ஆ... வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் மாதுளை இதழாள் மாதவி எழிலாள் மாங்கனி நிறத்தால் அம்மம்மா... மாதுளை இதழாள் மாதவி எழிலாள் மாங்கனி நிறத்தால் அம்மம்மா அம்மம்மா... அம்மம்மா... சுருள் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே சுருள் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே நூல் தாங்கும் இடையாள் கால்பார்த்து நடந்து நெளிகின்ற வடிவம் மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கும் குழல்கட்டை ஜாலம் பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி இதழ்கள் ஊறுமடி இதழ்கள் ஊறுமடி வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் புதுமுகமான மலர்களை நீந்தி நதிதனில் ஆடி கவி பல பாடி அசைந்து அசைந்து ஆடுங்கள் அசைந்து அசைந்து ஆடுங்கள்