Pet Lovers Anthem (Paal Mazhayin Thooralil) (From "Shot Boot Three")

Pet Lovers Anthem (Paal Mazhayin Thooralil) (From "Shot Boot Three")

Rajhesh Vaidhya

Длительность: 5:16
Год: 2023
Скачать MP3

Текст песни

பால் மழையின் தூரலில், வால் முளைத்த வானவில்
உன் மீது தாவிடும் போது ஓவியம் ஆவான்
காலமெனும் காற்றிலே, கால் முளைத்த கானமாய்
உன் மேலே பாய்ந்திடும்போது ஆறுதல் ஆவான்

கல்லுருகம் நேசமாய், பல் முளைத்த பாசமாய்
இருதயம் அதை கவ்வி, அவன் வானேருவான்
உனை உனை உனை சேர்ந்தே, உயிராய் மாறுவான்
இருதயம் அதை கவ்வி, அவன் வானேருவான்
உனை உனை உனை சேர்ந்தே, உயிராய் மாறுவான்

தீண்டலுக்கு ஏங்குவான், மார்பிலே தூங்குவான்
அவன் தாய் போல் என்னை வேலை வாங்குவான்
கட்டிலில் பாதியாய், என் தட்டிலே பாதியாய்
என் வாழ்வை ஆளுவான்

குறுஞ்சிரிப்பு தீட்டுவான்
வேருலகைக் காட்டுவான்
நான் விலகி போகையில்
என் நிழல் என்றாகுவான்

நாலுகால் நாயகன், தூறலாய் தூயவன்
தலைகீழாய் என்னை மாற்றும் மாயவன்
காலையில் சேயவன், மாலையில் சேவகன்
என் காதல் காவலன்

நான் பிரியும்போதிலே
என் கால்நனைப்பவன்
என் வருகைக்காகவே
தினம் காத்திருப்பவன்

இது வரை எனை யாரும் யாரும் காணாத விழிகளிலே
இது வரை எனை யாரும் யாரும் கொஞ்சாத மொழிகளிலே
மனதை தொடுவான் (மனதை தொடுவான்)
மமதை தருவான் (மமதை தருவான்)
எனது விழியோரம் ஈரம் நேரும்போது தானும் வாடுவான்

பால் மழையின் தூரலில், வால் முளைத்த வானவில்
உன் மீது தாவிடும் போது ஓவியம் ஆவான்
கல்லுருகம் நேசமாய், பல் முளைத்த பாசமாய்

He is my brother
What a lovely soul!
Oohhh yeah!