Sangeetha Vaanil

Sangeetha Vaanil

S.P.Balasubrahmanyam, Vani Jairam

Длительность: 4:47
Год: 1992
Скачать MP3

Текст песни

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

ஹாஆஹாஅஆஆ
ஆனந்த ராகங்களில்
நான் ஆலாபனை செய்கிறேன்
ஆஅஆஆஹாஆஆஆ
நான் உந்தன் கீதம் தன்னை
ஆராதனை செய்கிறேன்

கன்னங்களில் ஒரு வான் வண்ணமே
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே
கண்ணா உந்தன் குழல் நாதங்களால்
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே
ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

ஹாஆஅஹாஆஅஆஅஆ
பொன்மாலை வேளைகளில்
உன் வாசல் நான் தேடினேன்
ஹாஆஅஹாஆஅஆஅஆ
கண்ணென்னும் ஓடங்களில்
கரை தேடி நான் ஓடினேன்

கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று எனை வாட்டுதே
கண் மைகளில் சுகம் வளர்கின்றதே
உன்னில் தினம் உடல் கரைகின்றதே
இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம் தானே

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள்
தேடும்
என் காதல் பூ மயிலே