Kannadi Poovukku

Kannadi Poovukku

Santhosh Dhayanidhi

Длительность: 4:00
Год: 2016
Скачать MP3

Текст песни

கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல
உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல
மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல
உன்னால கண் தூங்கல

நீ தீ போல் பூச்செடி
போனதே என் மூச்சடி
உன்னால் தானடி மனம்
ஊஞ்சலாய் ஆடும் தேரடி

காதல் கண்ணுக்குள்ளே எட்டு போட
மின்னல் நெஞ்சுக்குள்ளே மெட்டு போட
பூமி பந்து போல
உந்தன் ஞாபகம் காதல் தான் சுத்துதே

உன்ன பார்த்தா
உச்சு கொட்டி போவேன்
பச்ச புள்ள ஆவேன்
அச்சு வெல்லம் நீ தானே

என்ன கேட்டா
காதல் சொல்ல மாட்ட
ராஜா ராணி சீட்ட
நெஞ்ச குலுக்கி போட்டாலே

குதிக்குறேன் பறக்குறேன்
பறவை போல நான்
இப்ப தரையிலும் மிதக்குறேன்
குழந்தை போல தான்

உருகுறேன் கரையுறேன்
மெழுக போல நான்
உன்ன இரவிலும் தொடருவேன்
நிழல போல நான்

கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல
உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல
மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல
உன்னால கண் தூங்கல

நான் யாரோடு பேச நீ இல்லாமலே
நான் யாரோடு யாரோ நீ சொல்லாமலே

உள்ளுக்குள்ளே காதல் உண்டானதே
ஊருக்கும் நட்புக்கும்
தெரியாமலே
கையோடு தான் கைகள் சேரும் வரை
கண்ணாலே நாம் பேசலாம்

குதிக்குறேன் பறக்குறேன்
பறவை போல நான்
இப்ப தரையிலும் மிதக்குறேன்
குழந்தை போல தான்
உருகுறேன் கரையுறேன்
மெழுக போல நான்
உன்ன இரவிலும் தொடருவேன்
நிழல போல நான்

கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல
உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல
மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல
உன்னால கண் தூங்கல

நீ தீ போல் பூச்செடி
போனதே என் மூச்சடி
உன்னால் தானடி மனம்
ஊஞ்சலாய் ஆடும் தேரடி