Machi Open The Bottle

Machi Open The Bottle

Yuvan Shankar Raja

Длительность: 4:46
Год: 2011
Скачать MP3

Текст песни

மச்சி ஓபன் த பாட்டில்

இது அம்பானி பரம்பர
அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிறைதான்

நம்ம கொட்டுன்னு ஒரு முறை
சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பண மழைதான்

நாம முன்னேறும் படிக்கட்டு
என்றாச்சு நம் வாழ்வு கிரிக்கெட்டு
இப்போ ஒன்பது கிரகமும் ஒன்னாக இருக்கு
ஓஹோன்னு நம் ஜாதகம்

ஆடாம ஜெயிச்சோமடா
நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம்
சும்மாவே உட்காந்து வின் எடுத்தோம்

இது அம்பானி பரம்பர
அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிறைதான்

நம்ம கொட்டுன்னு ஒரு முறை
சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பண மழைதான் ஹே

ஹே ஒன்னா ரெண்டா
ஆச உன்ன கண்டா
ஜில்லுனு நிக்கிற ஜிகருதண்டா

தப்பு தண்டா
செய்ய ஒப்பு கொண்டா
பூ மேல குந்துவேன் சோள வண்டா

ஏழு மலை இருக்கும் கடவுளுக்கும்
காசு தேவையினா கடன் கொடுப்போம்

அந்த குபேரன்
ஆவான் குசேலன்
நம்ம ப்ராபெர்ட்டி முன்னால சிங்கள் டீ
என்றாகும் சொர்க்கத்தில் சொத்துக்கள்தான்

ஹே உள்ளார வேற்காடு
உன்னால உண்டாச்சு நோக்காடு
போடேன்டி சாப்பாடு
தொட்டாக்க போடாத கூப்பாடு

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்ல

ஹே நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா
நான் கேட்டா கேட்டத கொடுப்பேன்
கேக்குற வரங்கள கேட்டுக்கோடா

ஹே தோழா மீன் வாழ நீர் வேணும்
நான் வாழ பீர் வேணும்
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து

தோழா இப்போதும் எப்போதும் முப்போதும்
வீசிடும் நம் பக்கம் காத்து காத்து
காத்து காலத்தில் தூத்திக்குவேன்
கால நேரத்தில் மாத்திக்குவேன்

போத ஆனாலும் மீறி போனாலும்
பாத ஓர் நாளும் என் கால்கள் மாறாது

என் பாட்டு வேறடா
எந்நாளும் என் ரூட்டு வேறதான்
என்னோட வேலைதான்
என்னான்னு ஊர் பேசும் நாளைதான்

இது அம்பானி பரம்பர
அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிறைதான்

நம்ம கொட்டுன்னு ஒரு முறை
சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பண மழைதான்

நாம முன்னேறும் படிக்கட்டு
என்றாச்சு நம் வாழ்வு கிரிக்கெட்டு
இப்போ ஒன்பது கிரகமும் ஒன்னாக இருக்கு
ஓஹோன்னு நம் ஜாதகம்

ஆடாம ஜெயிச்சோமடா
நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம்
சும்மாவே உட்காந்து வின் எடுத்தோம் ஹே