Idhayam (From "Once More")

Idhayam (From "Once More")

Hesham Abdul Wahab

Длительность: 3:48
Год: 2024
Скачать MP3

Текст песни

இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா

நதியில் தாளம் சேர்கிறதா
நொடியில் நாளும் பூக்கிறதா
அடடடடா அலை படகா
ஒரு உறவாய்

இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
இதயம் சொன்னால் கேட்காதா

தயக்கம் இல்லாமல் நுழைந்தாய்
திரைகள் வீழ்கிறதா
சிலுவை சுமந்த பறவை
சிறகை விரிக்கிறதா
அழுகை முடிந்த இடத்தில்
இசையும் பிறக்கிறதா
உலகம் பிடிக்க தொடங்கியது
உதடும் சிரிக்க பழகியதா
நாள் முழுதும் நீயெனவே ஆகிறதா

இதயம் சொன்னால் கேட்காதா

கிழக்கு வானில் சிரிக்கும் சூரியன்
உதிக்கும் நேரத்தில் தீ இவள்
கிழக்கு வானில் சிரிக்கும் சூரியன்
உதிக்கும் நேரத்தில் தீ இவள்
மின்னிடும் மையலை எடுத்து சூடிய பூ இவள்
இரவும் பகலும் இதயம் போரிடும் யார் இவள்

வெள்ளை தாழெனவே இருந்தேன்
வண்ணம் தெளிகிறதா
மழையே மறந்த மரத்தில்
மலர்கள் மலருகிறதா
அணைகள் உடைந்த பிறகே
இதயம் கனிகிறதா
மதில்கள் தூளாய் போகிறதா
முகிலில் ஈரம் கோர்க்கிறதா
நீ வரவே நீல் கனவே கலைகிறதா

இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா

நதியில் தாளம் சேர்கிறதா
நொடியில் நாளும் பூக்கிறதா
அடடடடா அலை படகா
ஒரு உறவாய்
இதயம் சொன்னால் கேட்காதா