Kanmaniyae Kadhal Enbathu

Kanmaniyae Kadhal Enbathu

S. P. Balasubrahmanyam, S. Janaki

Длительность: 4:23
Год: 1979
Скачать MP3

Текст песни

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா(ஆஆ )

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

லலலல லலலல லலலல

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா(லலலல )
நேரமும் வந்ததம்மா(லலலல )

பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்
பாடிடும் எண்ணங்களே(லலலல )
இந்த பாவையின் உள்ளத்திலே(லலலல )

பூவிதழ் தேன் குலுங்க
சிந்தும் புன்னகை நான் மயங்க

ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

லலலல லலலல லலலல

பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது
காரணம் நீயறிவாய்(லலலல )
தேவையை நானறிவேன்(லலலல )

நாளொரு வேகமும் மோகமும் தாபமும்
வாலிபம் தந்த சுகம்(லலலல )
இளம் வயதினில் வந்த சுகம்(லலலல )

தோள்களில் நீயணைக்க
வண்ணத் தாமரை நான் சிரிக்க

ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
தோரணமாய் ஆடிடுவேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ