Mudhal Mazhai Kaalam (From "Ainthu Ainthu Ainthu")

Mudhal Mazhai Kaalam (From "Ainthu Ainthu Ainthu")

Simon

Альбом: Tamil Pasanga
Длительность: 4:29
Год: 2013
Скачать MP3

Текст песни

முதல் மழை காலம் என் முதல் ரயில் பயணம்
எனது அன்பே, அன்பே, அன்பே நீயல்லவா
முதல் முத்தத் தயக்கம் அட மூச்சு முட்டும் மயக்கம்
எனது அன்பே, அன்பே, அன்பே நீயல்லவா

எந்நாளும் இன்பம் நான் தேடும் துன்பம்
என் தேவதையும் ராட்சசியும் நீயடி
என் காலை நேரம் பொன் மாலை நேரம்
தினம் உன்னைக் கண்டால் ரெக்கைகட்டி பறக்குமடி

முதல் மழை காலம் என் முதல் ரயில் பயணம்
எனது அன்பே, அன்பே, அன்பே நீயல்லவா
முதல் முத்தத் தயக்கம் அட மூச்சு முட்டும் மயக்கம்
எனது அன்பே, அன்பே, அன்பே நீயல்லவா

உன் கன்னத்தில் ஓர் ஓரத்தில்
சிறு மச்சமாய் என் வாழ்க்கை வேண்டுமே
இந்த மண்ணிலே கால் வந்தது நிறைவேறுமே
உன் எண்ணத்தில் ஓர் மூலையில்
என் ஞாபகம் அது இருந்தால் போதுமே
அந்த எண்ணத்தில் என் கால்களும் மெருகேறுமே

இது என்ன மாயம் மாயமடி
இந்த நெருக்கமும் நெருப்பாய் தெரிக்குதடி
எரிகின்ற போதும் தேகத்திரி
ஒரு சில்லென்ற ஈரம் தொட்டு, தொட்டு தீண்டுதடி

முதல் மழை காலம் என் முதல் ரயில் பயணம்
எனது அன்பே, அன்பே, அன்பே நீயல்லவா (அன்பே நீயல்லவா)
முதல் முத்தத் தயக்கம் அட மூச்சு முட்டும் மயக்கம்
எனது அன்பே, அன்பே, அன்பே நீயல்லவா

புரியாதது தெரியாதது அறியாதது உன் காதல்தானடி
இருந்தாலுமே அலைபாய்கிறேன் அடி நானடி
அடங்காதது அழியாதது நிலையானது என் காதல்தானடி
மௌனங்களால் உரையாடினேன் இது ஏனடி

எத்தனை கோடி வார்த்தை இருந்தும்
உயிர் காதலின் முகவரி மௌனங்களா
எரிமலை எரிவதை சொல்வதற்கு
சிறு தீப்பொறி போதும் வேறு ஏதும் தேவையில்லை

முதல் மழை காலம் என் முதல் ரயில் பயணம்
எனது அன்பே, அன்பே, அன்பே நீயல்லவா
முதல் முத்தத் தயக்கம் அட மூச்சு முட்டும் மயக்கம்
எனது அன்பே, அன்பே, அன்பே நீயல்லவா

எந்நாளும் இன்பம் நான் தேடும் துன்பம்
என் தேவதையும் ராட்சசியும் நீயடி
என் காலை நேரம் பொன் மாலை நேரம்
தினம் உன்னைக் கண்டால் ரெக்கைகட்டி பறக்குமடி