Oru Kal - Yuvan Shankar Raja (From "Siva Manasula Sakthi")
Yuvan Shankar Raja
5:07போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை ஆனாலும் பூமி அதிர்வது ஏன்? சொல்லடி விண்மீன்கள் இல்லை நிலாவும் இல்லை ஆனாலும் வானம் ஒளிர்வது ஏன்? சொல்லடி இமைகளை மூடாமலே இருதயம் தான் பார்க்குதா இருபது கால் பாய்ச்சலில் இரு விழியும் ஓடுதா மறுபடி நீ மறுபடி நீ போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை ஆனாலும் பூமி அதிர்வது ஏன்? சொல்லடி விண்மீன்கள் இல்லை நிலாவும் இல்லை ஆனாலும் வானம் ஒளிர்வது ஏன்? சொல்லடி அதிகாலை கதிராகவே உதித்தாயே புதிதாக்கவே உன்னாலே விடிவொன்று என்னில் பெண்ணே தடமில்லா மணலாகவோ அலையில்லா புனலாகவோ வாழ்ந்தேனே நீ பாதம் வைக்கும் முன்னே பேரலையாய் எந்தன் வானத்தின் நாணம் தீண்ட வந்தாயா கார் முகிலாய் எந்தன் நெஞ்சத்தின் ஆழம் தாண்ட வந்தாயா காற்று என என்னை நீ தூய்மை செய்து ஓடி போவாயா காயம் என எப்போதும் நீ என் தோழி ஆவாயா கேள்விக் கொக்கியில் மாட்டிக்கொண்ட நீ எந்தன் பூமியில் மறுபடி நீ மறுபடி நீ பிரிந்தாலும் பிரியாமலே ஒரு பூவும் உதிராமலே என் நெஞ்சின் காடெங்கும் என்றும் நீயே யுகம் எல்லாம் கடந்தாலுமே தனியாய் நான் நடந்தாலுமே என் தீயின் நிழலாக என்றும் நீயே வாசனைகள் கோடி என் வானில் வீச மூச்சிழந்தேனே உன் வரவின் ஒற்றை வாசத்துக்காக காத்திருந்தேனே சுவாசம் என உன்னை நான் உட்கொள்ளும் செய்கை மீமிகை இல்லை காதல் என நான் உன்னை சொன்னால் நியாயமும் இல்லை சொல்லில் சிக்கிடா அர்த்தம் போல நீ கண்ணில் சிக்கினாய் மறுபடி நீ மறுபடி நீ